<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/7768707?origin\x3dhttp://anuragam.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>


அனுராகம்

கதையும் கவிதையும் எழுத்தில் வனைந்த இன்னும் சிலதும் 



ஞாயிறு, டிசம்பர் 19, 2004
PDF

சக்கரவர்த்தி-2

"என்ன வேய் சொல்லுதீரு? வல்லவனும் குடிச்சிட்டு வந்துருப்பாம். அவனுக்க பணத்த அடிச்சிட்டு தல்லுமுள்ளாயிருக்கும். எவனும் வசக்கேடா வச்சதில அடிபட்டு விழுந்திருப்பான். அல்லாத லெச்சியுமில்ல ஒண்ணுமில்ல."

"இல்ல ஓய்! அப்பிடி இல்ல. இது லெச்சி தான். இதுக்கு மின்னயும் இது போல ரெண்டு பேரு செத்துக் கிடந்தினும். அதும் ரெத்தம் கக்கித்தான் கெடந்தினும். இதும் பாரும் வாயில ரெத்தம்."

"வாயில ரெத்தம்னா லெச்சியா? என்ன ஓய்? இந்த இருவதாம் நூற்றாண்டில வந்து இப்பிடி மூட நம்பிக்கைல பேசுதீரு."

"எலே எளவட்டப் பயலுவளா.. இருவதாம் நூற்றாண்டில லெச்சி வராதா? லெச்சிக்க சக்திய அறியாத பேசாதிய கேட்டியளா?" என்றார் செல்வராசுக்கு உதவிக்கு வந்த பெரியவர் செல்லப்பன். பனையேறி செல்லப்பன் என்றால்தான் வட்டாரத்தில் எல்லாருக்கும் தெரியும்.

"அம்மாச்சா..நீரு லெச்சிய கண்டிருக்கீரா."

"கண்டிருக்கேனா? அது கூடப் பேசிட்டே வந்திருக்கேன்." என்றார் பெரியவர்.

இளவட்டங்களுக்கு ஏதோ குஷி தோன்றியது. 'இனி சந்தைக்கும் போக ஏலாது. பெரியவரை வளைத்துப் போட்டால் கொஞ்சம் சமயம் போகும்' என்று தோன்றியது.

இதற்குள் போலீஸ் வந்து விட செல்வராசுவை அழைத்தார்கள். சவத்தை முதலில் பார்த்தவன் அவனல்லவா?

சம்பிரதாயங்கள் முடிந்து கொஞ்ச நேரத்தில் பிரேதத்தை போலீசார் எடுத்துப் போய் விட அங்கே கூட்டம் கலைந்தது.

இளவட்டங்களின் தூண்டுதலால் ஏதோ கதை பேச ஆரம்பித்த பெரியவர் பனையேறி செல்லப்பன் திடீரென நினைவு வந்தவராக "தம்பியளா..இப்பம் ஒரு சோலியாப் போறேன். வையிட்டு அந்தக் கலுங்குக்கு வாருங்க. லெச்சிக்க கதைய வெவரமாச் சொல்றேன்." என்றார்.

அவர்கள் கலைந்தார்கள்.
(வளரும்)

1:08:00 AM

தனிப்பதிவு | மதிப்பிடுக: - தமிழ்மணம் | 1 மறுமொழி* |


1 மறுமொழி:*


Anonymous Anonymous கூறுவது...

அன்புடையீர்,

வணக்கம்.

மேடைத் தமிழுக்கு மெருகூட்டும் அக்கறையுடன் சங்கம்4 என்ற பெயரில் 21 நாள் தமிழ் விழா நடத்துகிறோம். பல்துறைகளும் பெருமாற்றங்கள் கண்டு வரும் நவீன யுகத்தின் தன்மைகளையும் செல்நெறிகளையும் உள்வாங்கி அமைவதாலேயே சங்கம்4 என்ற பெயர் சூடல். பங்கேற்கும் உரையாளர்கள் துறைசார் தகுதி கொண்ட அறிவாளர்கள். அரசியல் – சாதி – சமயம் கடந்த உரையாடல் களமாகவும் இதனை கட்டமைக்கிறோம். குவலயத் தமிழர்கள் இணைய மேடையில் இணைவார்கள். ஆங்கில மொழியில் புகழ்பெற்று நிலைத்துவிட்ட TEDTALKSTED TALKS போல தமிழில் sangamசங்கம்4 பரிமளிக்க வேண்டும்.
“நமக்கு இன்று தேவை மாற்றம், அது நம்மால் முடியும்” என்றுரைத்து ஆக்கப்பூர்வமான நற்பணிகளை அமைதியாகச் செய்து வரும் “நாம்” அமைப்பு சங்கம்4 அரங்கினை அமைக்கிறது. தமிழ் மையம் அமைப்பு துணை நிற்கிறது.
அறிவுத்தேடல், தர்க்க விசாரணை, இலக்கிய தரிசனம், கட்டுக்கொப்பின் அழகியல் என மேடைத்தமிழின் உயர்ந்த மரபுகளை மீண்டும் தேடுகிற சிறியதோர் இச்சீரிய முயற்சியில் இணைந்திட உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

இப்படிக்கு,
“நாம்” அமைப்பு.
“தமிழ் மையம்” அமைப்பு

https://www.facebook.com/sangamfour

 

Post a Comment

மறுமொழி இடுக!


Free stats

© வலைஞன் 2005 - Powered for Blogger by Blogger Templates