கதையும் கவிதையும் எழுத்தில் வனைந்த இன்னும் சிலதும்
கர்ப்பம் சுமக்கும்
கருப்பை
கருமை நிறம்
- பெண்ணின் நிறம் எதுவானாலும்..
பிறக்கும் பிஞ்சுகள்
குடிக்கும் தாய்ப்பால்
வெள்ளை நிறம்
- தாயின் நிறம் எதுவானாலும்..
ஆகாயமும் ஆழ்கடலும்
எவரது பார்வைக்கும்
நீல நிறம்
- கண்ணின் நிறம் எதுவானாலும்..
காமாலைக் கண்ணனுக்கு
காண்பதெல்லாம்
மஞ்சள் நிறம்
- அவன் சாதி எதுவானாலும்..
பேருந்து விபத்தில் அடிபட்டுச் சிதறிய
அறுபதுபேரின் ரத்தமும்
சிவப்பு நிறம்
- தோலின் நிறம் எதுவானாலும்..
மரித்த மனிதன் சடலம் சிதைந்த
மண்ணில் முளைத்த புற்கள்
பச்சை நிறம்
- அவன் மதம் எதுவானாலும்..
மாறாது வாசம்
முகரும் பொழுதில்
நுகரும் இன்பம்
- ரோஜா நிறம் எதுவானாலும்..
தனிப்பதிவு | மதிப்பிடுக: - தமிழ்மணம் | 2 மறுமொழிகள்* |
Post a Comment