<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/7768707?origin\x3dhttp://anuragam.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>


அனுராகம்

கதையும் கவிதையும் எழுத்தில் வனைந்த இன்னும் சிலதும் 



வியாழன், செப்டம்பர் 30, 2004
PDF

பெயரில் என்ன இருக்கிறது


ஆரோக்கியமில்லாத ஆரோக்கியசாமி
பார்வைக்குறைவுள்ள கண்ணாயிரம்
அவலட்சணமான அழகரசி
அசட்டுத்தனமான மதியழகன்
சின்னவயசில் செத்துப்போன சிரஞ்சீவி
பாவாடை என்றபெயரில் ஆம்பிள
படிக்காதவன் பேரு அறிவானந்தம்
சோகத்திலேயே வாழும் ஆனந்தன்
முரட்டுமனிதன் அன்பு
பெரியமனிதர் சின்னத்தம்பி
ஊமைப்பெண் தேன்மொழி


பெயர்களில் இத்தனை
முரண்பாடுகள்
முரணில்லா முகவரி தேடி
முரணுடன் நானும்...


பெயரில் என்ன இருக்கிறது
எதேதோ இருப்பதாய்
பெயரியல் நிபுணர்கள்
தெருவுக்கு நாலுபேர்...


அண்ணா, பெரியார்
என்பதுபோலப்
பெயர்களே இல்லாத
பெயர்களும் பேசப்படுகின்றன
பேசப்படாத பெயர்கள்
பெயர்களாயிருந்தென்ன...


அடையாளங்கள் சிலசமயம்
பெயர்களாவதுண்டு
கோடிவீட்டு வாத்தியார்
மாடிவீட்டு சேட்டு
என்பதுபோல
மூக்கன், கறுப்பன்
பெயர்களா அடையாளங்களா?



12:54:00 PM

தனிப்பதிவு | மதிப்பிடுக: - தமிழ்மணம் | 1 மறுமொழி* |


1 மறுமொழி:*


Blogger :: விமல் :: கூறுவது...

நல்ல விடயமே . . .

 

Post a Comment

மறுமொழி இடுக!


Free stats

© வலைஞன் 2005 - Powered for Blogger by Blogger Templates